மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைக்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை வகிக்க, கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், உதவி கமிஷனர் காளிமுத்தன் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், ஐயர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து தங்கள் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி மற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி மனுக்களாக அளித்தனர்.

அதனை பெற்று கொண்ட மேயர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் குறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார். மேலும் இம்முகாமில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர். குறிப்பாக முன்னாள் மண்டல தலைவர் இசக்கிமுத்து, மாநகராட்சி 14வது வார்டில்ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்ற கோரி மனு அளித்தார். இதில் நிர்வாக அலுவலர் ரங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: