திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பகலவன் தலைமை தாங்கினார். முன்னதாக தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ், பொதுக்குழு ராமமூர்த்தி, குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், சத்தியவேலு, ரமேஷ்ராஜ், பரிமளம், பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கன்னிகை ஸ்டாலின், ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், ரவிச்சந்திரன், அபிராமி, மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதி பார்வையாளர்கள் அரசகுமார், அமுதரசன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பூத் கமிட்டியில் உறுப்பினர்கள் சேர்ப்பது, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவை குறித்து மாவட்ட செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களிடம் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகள் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்புன் நன்றி கூறினார்.

Related Stories: