பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் இருக்கணும் இல்ல..நாங்க இருக்கணும்: உள்துறை அமைச்சர் சொல்கிறார்

லாகூர்: பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் இருக்க வேண்டும். அல்லது நாங்கள் இருக்க வேண்டும் என்று   உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்தார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதில் இருந்து அங்கு மிகப்பெரிய அளவில் அரசியல் பிரச்னை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கும், இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சிக்கும் இம்ரான்கான் கட்சிக்கும் இடையே தான் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி தனியார் டிவி சேனலில் நவாஸ் கட்சியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான ரானா சனாவுல்லா கூறியதாவது:

பாகிஸ்தான் அரசியலில் ஒன்று இம்ரான்கான் இருக்க வேண்டும். அல்லது எங்கள் கட்சி இருக்க வேண்டும். யாராவது ஒருவர் தான் பாகிஸ்தான் அரசியலில் இருக்க முடியும். அதை நோக்கித்தான் பாகிஸ்தான் அரசியல் சென்று கொண்டு இருக்கிறது. இம்ரான்கானுக்கு எதிராக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லத்தயார். பாகிஸ்தான் அரசியலில் பகை உணர்வை இம்ரான் வளர்த்து விட்டு விட்டார். இப்போது அவர் எங்கள் எதிரி. அவரை அப்படித்தான் கருத முடியும். அவரால் பாகிஸ்தான் அரசியலில் அராஜகம் வந்து விட்டது. கடந்த 11 மாதங்களாக நாட்டை பற்றி எரிய வைக்க நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: