ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் மரணம்: திரையுலகினர் கடும் அதிர்ச்சி சோகம்

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ரிச்சர்ட் டிமிட்ரி உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 83வது வயதில் காலமானார். ஹாலிவுட் திரையுலகில் 1980களில் கொடிகட்டிப் பறந்த நடிகர் ரிச்சர்ட் டிமிட்ரி, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். முன்னதாக பிராட்வே நாடகங்களில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், 1975ம் ஆண்டு ‘வென் திங்ஸ் வேர் ரோட்டன்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்றார். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக 1998ம் ஆண்டே திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற இவர், பின்னர் தனது மனைவியுடன் இணைந்து கலைப் பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் விற்பனையாளராக வெற்றிகரமாக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தசாப்தங்களாக இதயம் மற்றும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த ரிச்சர்ட் டிமிட்ரி, சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். மறைந்த நடிகருக்கு கிறிஸ்டியன் எங்ஸ் என்ற மனைவியும் இருந்தார். இவர்களது மகன் ஜான் டபிள்யூ டிமிட்ரி, கடந்த 2017ம் ஆண்டு தனது 19வது வயதில் பிறவி இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்பது சோகமான செய்தியாகும்.

Related Stories: