2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி; சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வாஷிங்டன்: சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது. கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சிரியாவின், பால்மைராவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள்2 பேர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக டிச.20ம் தேதி மத்திய சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தளங்களை குறி வைத்து 70க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாத தளங்களை குறி வைத்து இரண்டாவது முறையாக நேற்று அமெரிக்கா வான் வழி தாக்குதலை நடத்தியது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. இதில், தீவிரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை.

Related Stories: