வாஷிங்டன்: அமெரிக்காவின் சுகாதாரத்துறை செயலர் ராபர்ட் எஸ் கென்னடி ஜேப்பியார் 2025-30 ஆண்டுகளுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிடுள்ளார், அமெரிக்க மக்களின் ஆரோக்கியசெயற்கையி த்தை சீரழிக்கும் சர்க்கரை மீது போர் பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி சர்கரையொரு நச்சாக கருதப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சக்கரையை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களுக்கு பதிலாக நார் சத்து மிகுந்த முழு தானியங்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தசை வலிமை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த அதிக புரதசத்து வைகுந்த உணவுகளை உன்ன அமெரிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. பண்ணைகளிலிருந்து நேரடியாக கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உண்மையான உணவை உண்ணுங்கள் என்ற முழக்கம் அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் வெறும் அறிவுரைகளாக மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பள்ளி மதிய உணவு திட்டங்கள் மற்றும் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ளவர்களுக்கான உணவு உதவி திட்டங்களில் உடனடியாக செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் அரசு வழங்கும் உணவுகளில் இனி சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு பெருமளவு குறைக்கப்படும். அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை அங்கு அதிகரித்து வரும் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இது உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்காவை போல் இந்தியாவிலும் சர்க்கரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
