அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு

ஸ்டாக்ஹோம்: ‘குற்றவாளிகளை நான் நேசிக்கிறேன், போலீசாரை வெறுக்கிறேன்’ என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றத் துறை அதிகாரி சுட்டதில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜாரா லார்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களைப் பதிவிட்டார். அதில், ‘நான் அகதிகள், திருநங்கைகள் மற்றும் குற்றவாளிகளை நேசிக்கிறேன். அதேசமயம் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளை (ஐசிஇ) வெறுக்கிறேன்’ என்று காரசாரமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘பலாத்காரம், கருக்கலைப்பு, சோசலிசம் போன்றவற்றை ஆதரிக்கிறேன்’ என்றும் அவர் பட்டியலிட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளிகளை ஆதரிப்பதாகக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு ஜாரா லார்சன் பின்னர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘வன்முறையற்ற போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளையே நான் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டேன். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்க வேண்டும். எனது காதலன் கூட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியதால் அமெரிக்கா வர முடியவில்லை. உண்மையான குற்றவாளிகள் அதிகாரிகள்தான். கொலை மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளை விட, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எவ்வளவோ மேல்’ என்று அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories: