சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராகினர். வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி தரப்பு வழக்கறிஞர் ஹேமராஜன் உள்ளிட்டோர் குறுக்கு விசாரணை செய்தனர்.

Related Stories: