திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசுகையில், ‘‘திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவை தனியாக தொடங்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 26 சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் எடுத்துச் சொல்லியிருப்பதைப் போல, இதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: