சேலம் வழியே செல்லும் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஒரு பகுதி ரத்து

சேலம்: கெலமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது கூலித்தொழிலாளி மீது போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அப்பணி நடக்கும் ஒரு மாத காலத்திற்கு சில குறிப்பிட்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வகையில், கோவை, ஈரோடு, சேலம் வழியே திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கத்தில் இருமார்க்கத்திலும் ஒரு பகுதியை ரத்து செய்து அறிவித்துள்ளனர்.  

இதன்படி, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695) நாளை (27ம் தேதி) முதல் வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கொச்சுவேலி வரை மட்டும் இயக்கப்படுகிறது. கொச்சுவேலி-திருவனந்தபுரம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12696) வரும் 28ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஒரு பகுதியாக திருவனந்தபுரம்-கொச்சுவேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு வருகிறது. இத்தகவலை தெற்கு ரயில்ேவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: