விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி முதலாளிகளுக்கு இடையே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கூலி உயர்வு குறித்து கடந்தாண்டு அப்போதைய வருவாய் ஆர்டிஓ  சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முதலாளிகள் கூலி உயர்த்தி கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து, கடந்த மாதம் நெசவாளர்கள்  வருவாய் ஆர்டிஓ ஹஸ்ரத்பேகத்திடம் கூலி உயர்வு பெற்று தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.  

இதனை பெற்றுக் கொண்டவர், இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு காணப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், திருத்தணி வருவாய் ஆர்டிஓ., அலுவலகத்தில் நேற்று  விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி முதலாளிகளுக்கு இடையே ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை ஆர்டிஓ., ஹசரத்பேகம் தலைமையில் நடந்தது. இதில், முதலாளிகள் தரப்பில் கூலி உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மேலும், கூட்டத்தில் பங்கேற்காத சில முதலாளிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என ஆர்டிஓ ஹசரத்பேகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: