9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென கோடை மழை பெய்ததால் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள உற்பத்தியாளர்கள், சேமித்து வைக்கப்பட்டு இருந்த உப்பை தார்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை, பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க குறைந்தது ஒரு வாரமாகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: