குப்பையில் வீசிய வைர கம்மல் மூதாட்டியிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளர்களுக்கு நன்றி

தாம்பரம்: ராஜகீழ்ப்பாக்கம், ராதே ஷியாம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜானகி (65). இவர், நேற்று குப்பையை வழக்கம்போல வீட்டின் அருகே வந்த தாம்பரம் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் போட்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் தனது காதில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைர கம்மல் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் வீடு முழுவதும் தேடியும் கம்மல் கிடைக்காததால், தான் அஜாக்கிரதையாக கீழே விழுந்த வைர கம்மலை குப்பையுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதில் சென்ற குப்பை வாகனத்தை கண்டுபிடித்து, அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கார்மேகம் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் வாகனத்தில் இருந்த குப்பையை 1 மணி நேரமாக அகற்றி பார்த்தபோது, வைர கம்மல் குப்பையுடன் கிடந்ததை கண்டுபிடித்தனர்.இதை அறிந்த சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் இணைந்து, குப்பையில் கண்டெடுக்கப்பட்ட வைர கம்மலை மூதாட்டி ஜானகியிடம் ஒப்படைத்தனர். அவர், தூய்மைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: