ஈரோடு வாராந்திர ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகை: தேர்தலுக்கு பின் மீண்டும் களைகட்டியது ஜவுளி வர்த்தகம்

ஈரோடு: ஈரோட்டில் இடைதேர்தல் விதிமுறைகளால் கலை இழந்து காணப்பட்ட ஜவுளி சந்தை மீண்டும் அண்டை மாநில வியாபாரிகள் வருகையால் நேற்று விடிய விடிய வர்த்தகம் கலை கட்டியது. தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் வாரம் தோறும் திங்கள் இரவு முதல் செவ்வாய் மாலை வரை வாராந்திர ஜவுளி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் வந்து மொத்த ஜவுளிகளை வாங்கி செல்வார்கள்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் காரணமாக ரூ.50,000 மேல் பணம் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால் கடந்த சில வாரங்களாக கலை இழந்து காணப்பட்ட ஈரோடு ஜவுளி சந்தை தேர்தல் முடிந்ததால் மீண்டும் கலைக்கட்டியுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் உள்ளூர் வியாபாரிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இன்று மாலை வரை வர்த்தகம் தொடரும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒன்றரை மாதத்தில் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு மொத்த மற்றும் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டதாக ஜவுளி வணிகர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகளின் வருகையால் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக ஈரோடு வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: