வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிட நல மேல்நிலை பள்ளி உள்ளது. இங்க, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு (1993-1996) பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களின் மனைவி குழந்தைகளுடனும், முன்னாள் மாணவிகள் தங்களின் கணவர், குழந்தைகளுடனும் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கழித்து பள்ளிக்குள் வரும் நினைவுடன் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தனர். மேலும், பழைய பள்ளியின் சம்பவங்களை நினைவுப்படுத்தி பயின்ற பள்ளி வகுப்பறைகளை பார்த்து, தாங்கள் அமர்ந்த இருக்கைகளில் அமர்ந்து, அன்றைய ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், அதனை எவ்வாறு நாம் கற்று கொண்டோம் போன்ற பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டானர்.
