திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மை தாயாருடன் திருக்கல்யாணம்

திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

12 நாட்கள் நடைபெறும் மாசி மாத திருவிழாவில் தினமும் காலை மாலை இருவேளையும் முருகப்பெருமாள் ஒவ்வொரு வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிலையில் இன்று ஒன்பதாம் நாள் மாசி திருவிழாவில் இருளர் சமுதாய மக்கள் மலை அடிவாரத்தில் இருந்து வள்ளியம்மை தாயாருக்கு மேலத்தாளங்களுடன் சீர்வரிசை ஊர்வலமாக வந்து மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.

பின்னர் அதிகாலை உற்சவர் முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மை தாயாருக்கும் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் திருக்கோயில் சார்பில் தாலிக்கயிறு மஞ்சள் குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: