குஜராத் தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி அரி நாடார் சிறையில் அடைப்பு

சென்னை: குஜராத் தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 16ம் தேதி வரை போலீசார் சிறையில் அடைத்தனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏற்றுமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51),பெங்களூரை சேர்ந்த முகம்மது அலி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் மூலம் அரி நாடார் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அரி நாடார் ரூ.100 கோடி பணத்தை வங்கியில் லோன் வாங்கி தருவதாகவும், உறுதி அளித்துள்ளார். அதற்கு கமிஷனாக அரி நாடார் ரூ.1.50 கோடியை சக்ராத்திடம் பணம் வாங்கிவிட்டு, ரூ.100 கோடி கடன் வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டார். இதனால் குஜராத் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51). சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரசித் தீபா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரி நாடாரை கடந்த 27ம் தேதி அதிரடியாக கைது செய்தார்.  நேற்று பிற்பகல் எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரேவதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் ரேவதி வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories: