புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் தீவிரம் ‘நம்ம சேலம்’ வாசகத்துடன் ₹98 லட்சத்தில் பசுமைப்பூங்கா-பயணிகளை கவரும் வகையில் அமைப்பு

சேலம் : சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் ₹98 லட்சம் மதிப்பீட்டில் நம்மசேலம் என்ற வாசகத்துடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதுவிரைவில் மக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் 5வது பெரியநகரமாக சேலம் மாநகரம் உள்ளது. சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ₹1000கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. இதைதொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 92க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் 40க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் முடிந்துள்ளது. மீதியுள்ள பணிகள் நடந்து வருகிறது.

₹92கோடியில் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதையடுத்து, பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியை அழகுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹98 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், பசுமை பூங்கா, சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், கழிப்பிட வசதி, சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. மேலும் பஸ் ஸ்டாண்டின் முகப்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில்  ‘நம்ம சேலம்’ என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. தலைநகரான சென்னையில் வைத்துள்ளது போல் சேலத்தில் இந்தவாசகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும், 15வது நிதி கமிஷன் மூலமும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டை அழகுபடுத்தும் பணி  மேற்கொள்ளப்பட்டது. மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் முகப்பு பகுதியில் சென்னை மெரீனாவில் நம்ம சென்னை என்ற வாசகம் அமைக்கப்பட்டது போல், சேலத்திலும் நம்ம சேலம் என்ற வாசகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பஸ் ஸ்டாண்டின் முகப்பு பகுதி சீரமைக்கப்பட்டது. ₹98 லட்சத்தில் பசுமை பூங்காவோடு நம்ம சேலம் என்ற வாகசம் உருவாக்கப்பட்டுள்ளது.    மேலும் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிதளம், காபி ஷாப், கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம சேலம் முன்பு பயணிகள், பொது மக்கள் நின்று போட்டோ எடுத்து கொள்ளும் வகையில் அமைத்துள்ேளாம்.

நம்ம சேலம் வைக்கப்பட்ட பகுதியில் பசுமையுடன் கூடிய புல் தளங்கள் போடப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், சாக்கடை கழிவு வெளியே செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. நம்ம சேலத்துடன் கூடிய பசுமை பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: