அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார் திரைப்பட போட்டி: 35 அரசு பள்ளிகள் பங்கேற்று அசத்தல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறார் திரைப்படம் சார்ந்த போட்டிகள் நடந்தன. இதில், 35 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்  வட்டாரத்தில் செயல்படும் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு திரைப்படத் துறையில்  கால்பதித்து தனித்து விளங்க, சிறார் திரைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இந்த திரைப்படங்களை கண்டுகளித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் 7  விதமான போட்டிகள் மதுராந்தகம் வட்டார அளவில்  மதுராந்தகம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மைத்திலி தலைமையில்  கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.இதில், 35 அரசு பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  

திரைப்பட கதையை நடித்து காண்பித்தல், திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்குதல், திரைப்படத்தைப் பற்றி விவாதித்தல், திரைப்படத்தின்  வடிவமைப்பு பற்றியும் விவாதித்தல், திரைப்படத்தின் போஸ்டர் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வேடவாக்கம், எல்.எண்டத்தூர், ஓணம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி  பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

Related Stories: