கொடைக்கானலில் காட்டுத்தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பிஎல் செட் அருகேயுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலையுர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக இரவில் நடுங்கும் குளிர் நீடித்து வந்தாலும் பகலில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது.

இதனால் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவியது. இந்நிலையில் நேற்றிரவு கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பிஎல் செட் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.  தொடர்ந்து தீ பற்றி எரிவதால் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர்  2வது நாளாக இன்றும் போராடி வருகின்றனர்.

Related Stories: