ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு ஏன்?: டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

விருதுநகர்:தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ராமநாதபுரத்தில் ஆய்வு நடத்திவிட்டு, செல்லும் வழியில் விருதுநகர்- மதுரை ரோட்டில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். ஆவணங்கள், கோப்புகளை ஆய்வு செய்து காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மோசமான குற்றவாளிகள், தற்போது யார் ரவுடி என தெரியாத அளவிற்கு காவல்துறை கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் அங்கும், இங்குமாக சில ரவுடிகள் குற்றம் நிகழ்த்தி விடுகின்றனர். அவர்களை பிடிக்க செல்லும்போது மோசமான குற்றவாளிகள், காவல்துறையினரை தாக்குகின்றனர். தற்காப்பிற்காக மட்டுமே போலீசார் காலில் சுடுகின்றனர்.  எனவே, தமிழகத்தில் குற்றவாளிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பழைய வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கி தருவது நோக்கமாக உள்ளது. 8, 9 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஹரியானா, பஞ்சாப்பிற்கு சென்றவர்களை கூட பிடித்து கொண்டு வந்து சிறையில் அடைத்துள்ளோம்.

அதே போல் கஞ்சா தொடர் வேட்டை நடத்தி வருகிறோம்.  கஞ்சாவை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரை விற்பனையை குறைத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: