உடல்நல குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை: உடல்நல குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திமுகவினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் கல்லுக்குளத்தை சேர்ந்தவர் உபயதுல்லா (83). இவர், 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார்.

இவர் உடல் நல குறைவு காரணமாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஅவரது உடலுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். உபயதுல்லாவின் மனைவி மற்றும் மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், ஒரு மகள் மட்டும் உள்ளார்.

நேற்று அவரது உடல் தஞ்சாவூர் ஆத்துப்பாலம் ஜூம்மா மசூதியில் தொழுகைக்கு பின்னர் அங்குள்ள முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் உபயதுல்லா உருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: