திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து பாஜ தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் விசிக புகார்

சென்னை:  சென்னை டிஜிபி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது சமூக வலைத்தளங்களிலும், பொது மேடையிலும் அவதூறு பேசி வந்த பாஜ பட்டியல் பிரிவு தலைவர் தடா பெரியசாமி மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு அவதூறாக பேச தடை விதித்திருந்தது. ஆனால் மீண்டும் தடா பெரியசாமி பொது மேடைகளில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பற்றி தொடர்ந்து அவதூறு பேசிக்கொண்டே இருக்கிறார்.

எனவே பாஜ பட்டியல் பிரிவு தலைவர் தடா பெரியசாமி, நீதிமன்ற தடை ஆணையை மதிக்காமல் தமிழக காவல்துறையை துச்சமென மதித்து வேண்டுமென்று திட்டமிட்டு 2 சமூகங்கள் மத்தியில் பகை உணர்ச்சியை துண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து தேச விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். எனவே காவல்துறையில் மாநிலம் முழுவதும் தடா பெரியசாமி மீது அளிக்கப்படும் புகார்களின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: