ரத்தினகிரியில் அறுகோண தெப்பக்குளம் திறக்கும் நேரம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஆற்காடு: ரத்தினகிரி அறுகோண தெப்பக்குளம் திறப்பு நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் புதியதாக அறுகோண தெப்பக்குளம் கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தெப்பக்குளம் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அந்த நேரங்களில் பக்தர்களுக்காக திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், தேவாரம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், ரத்தினகிரி அந்தாதி மற்றும் பக்தி பாடல்களும், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவும் ஒலி, ஒளி அமைப்பின் மூலம் ஒளிபரப்பப்படும். பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று வேள்வி பூஜை செய்து பக்தர்களே தங்கள் கையால் ஆரத்தி செய்யலாம். குளம் ஆழமானதாகவும், 11 அடி தண்ணீர் உள்ளதால் தெப்பக்குளத்தில் யாரும் இறங்க கூடாது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: