திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சிறுனியம் கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியை தவிர்ப்பதற்காக கிராமத்திற்குள் கனரக வாகனங்கள் செல்வதாக குற்றம்சாட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கனரக வாகனங்கள் ஊருக்குள் அடிக்கடி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
