கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்: வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை

சிவகாசி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மதுரையில் இருந்து கோவை செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக மதியம் 12.15 மணிக்கு கோவை செல்லும். மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.05 மணிக்கு மதுரை வந்தடையும்.

இரவு மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் வழக்கம் போல் காலை கோவைக்கு ரயில் புறப்படுகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை-மதுரை ரயில் செங்கோட்டை வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது இந்த ரயிலில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். செங்கோட்டையில் இருந்து கோவைக்கு நேரிடையாக ரயில் இயக்கப்படவில்லை.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை தென்காசி, ராஜபாளையம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம் வழியாக கோவைக்கு ரயில் சேவை இல்லை. கோவை-மதுரை ரயிலை செங்ேகாட்டை வரை நீட்டிப்பு செய்தால் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனளிக்க கூடியதாக அமையும்.

மேலும் பழனி, பொள்ளாச்சி வழியாக இந்த ரயில் கோவைக்கு செல்வதால் பழனி செல்லும் பக்தர்கள் அதிக அளவில் பயணம் செய்வர். தென்காசி, ராஜபாளையம், சிவகாசி பகுதி பொதுமக்கள் ெபாள்ளாச்சிக்கு வியாபார நிமித்தமாக அதிகம் சென்று வருகின்றனர். மதுரை-கோவை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டால் வர்த்தகர்கள் ெபரிதும் பயனடைவர் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: