பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 9 பேர் விடுதலை..!!

கிருஷ்ணகிரி: பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முல்லைவேந்தனுடன் முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் உட்பட 9 பேரை கிருஷ்ணகிரி கோர்ட் விடுதலை செய்தது. 2003ம் ஆண்டு ராயகோட்டையில் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. முல்லைவேந்தன் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடந்த இடம் அருகே பட்டாசு வெடித்த போது ஒருவர் உயிரிழந்தார்.

ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்ததில் தஸ்தகீர் என்ற இளைஞர் உயிரிழக்க நேரிட்டது. சம்பவம் தொடர்பாக முல்லைவேந்தன், எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 9 பேரையும் விடுதலை செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: