தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்ட மக்களும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், காவடி சுமந்து வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் நெய்தீபம் ஏற்றியும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ச்சியாக கூட்டம் அலைமோதுவதால் சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: