காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை

கோவை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடும் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சூலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், சூலூர் அன்னமட வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜய் (21). கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், சூலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த ராசிபாளையத்தை சேர்ந்த ஒருவரின் மகளை (18) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை  சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று  ராசிபாளையம் ரயில்வே கேட் அருகே அஜய்யும், மாணவியும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: