மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஒரு வாலிபர் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்து, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் மிரட்டி பணம் பறிப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இரவுநேர ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறைமலைநகர் அருகே டான்சி பேருந்து நிறுத்தம் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மறைமலைநகர் அருகே வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி மணிகண்டன் (26) என்பதும், இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் நேற்றிரவு மறைமலைநகர் பகுதியில் பட்டாக்கத்தி முனையில் மக்களை மிரட்டி பணம், நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாக்கத்தி முனையில் பணம் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட ரவுடி மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: