காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணி சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைத்து கட்சியினரும்  மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம்   இன்று காஞ்சிபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. திமுக சார்பில்  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து புறப்பட்ட திமுகவினரின் அமைதி பேரணி,  காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டைமண்டபம் வழியாக  சென்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது. பின்னர், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவரும் மாவட்ட பொருளாளருமான  சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநெல்லிபாபு, பகுதி  செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துச்செல்வம், ஜெகநாதன், சுப்புராயன், நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ்  சிகாமணி மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதுபோல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ  சிலைக்கு கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா உட்பட கலந்துகொண்டனர். அதிமுக சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பகுதி செயலாளர்கள் எம்.பி.ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளரணி ஏகாம்பரம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்க மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான பெர்ரி தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: