பெஷாவர்: பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி, போலீஸ் சீருடையில் மசூதிக்குள் புகுந்து தொழுகை நடந்து கொண்டிருந்த போது தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.