சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி கே.முத்துசாமி (101). நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் அவரது உடல், கொடுமுடியில் உள்ள வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு, பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர் அஞ்சலி செலுத்தினர். 1942 ஆகஸ்ட் 8ம் தேதி மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர் முத்துசாமி.

Related Stories: