தெலுங்கு பட இயக்குனர் மரணம்

ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான வித்யா சாகர் ரெட்டி (70), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 1952ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த வித்யா சாகர் ரெட்டி, 1983ல் ‘ராகாசி லோயா’ என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குநரானார். அவரது ஸ்டுவர்டுபுரம் டொங்காலு (1991) திரைப்படம் 3 நந்தி விருதுகளை வென்றது. இந்நிலையில், இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெற உள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: