ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?

டெல்லி: மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் மின்னணு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இவ்வழக்கில் வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?

*தேர்தல் முடிவுகளில் 2 மற்றும் 3ம் இடம் பெறும் வேட்பாளர்கள் இயந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பிக்கலாம்

*தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வேட்பாளர்கள் வைக்கலாம்

*கோரிக்கைக்கு பின் மின்னணு இயந்திர தயாரிப்புக் குழுவின் பொறியாளர்கள் இயந்திரங்களை பரிசோதிப்பார்கள்

*சரிபார்க்க வேண்டிய இயந்திரங்களை வாக்குச்சாவடி வரிசை எண் மூலம் வேட்பாளர்கள் அடையாளம் காண வேண்டும்.

*பொறியாளர்களின் பரிசோதனையின்போது வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடனிருக்கலாம். சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, எந்திரத்தின் நிலையை தெரிவிக்க வேண்டும்.

*கோரிக்கை வைக்கும் வேட்பாளரிடம் இருந்து சரிபார்ப்பு செயல்முறைக்கான செலவுத் தொகையை வசூலிக்க வேண்டும்.

*இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால் வேட்பாளர் கட்டிய செலவுத்தொகை திருப்பித் தரப்படும்.

The post ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன? appeared first on Dinakaran.

Related Stories: