சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து இன்று 2வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று தேர்தல் முடியும் பட்சத்தில் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.

ஜுன் 1ல் கடைசி கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் இந்த தேர்தலிலேயே சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை பாதுகாக்கவும் உத்தரவிட்டது. மேலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் ஸ்ட்ராங் ரூமிலேயே சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

The post சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: