ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!

டெல்லி : மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு..

*ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது

*சின்னங்கள் பதிவேற்றும் எந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும், அதனை 45 நாட்கள் பாதுகாக்க வேண்டும்

*வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவித்த 7 நாட்களுக்குள் ஈவிஎம்-ல் உள்ள மைக்ரோ கன்ட்ரோலை சோதிக்க அனுமதி கோரலாம். உரிய அனுமதியுடன் பொறியாளர்கள் பரிசோதிக்கலாம்.

*பரிசோதனைக்கான செலவுகளை கோரிக்கை வைக்கும் வேட்பாளர்களே ஏற்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் செலவுத்தொகை திருப்பி அளிக்கப்படும்.

The post ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: