வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் சென்னையில் 5ம் தேதி டாஸ்மாக் திறக்க தடை: கலெக்டர் அமிர்த ஜோதி உத்தரவு

சென்னை: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி, வரும் 5ம் தேதி சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி  உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்.5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகள் மற்றும் ஓட்டல்களை சார்ந்த பார்கள் உள்ளிட்ட அனைத்தும் பிப்.5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்பட்டு,  மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: