மயிலாடும்பாறை பகுதியில் சாம்பார் வெள்ளரி விளைச்சல் அமோகம்-போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

வருசநாடு : மயிலாடும்பாறை பகுதியில் சாம்பார் வெள்ளரி விளைச்சல் அமோகமாக இருந்த போதிலும், அதற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன்தொழு பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு சாம்பார் வெள்ளரி தினந்தோறும் பல லாரிகளில் ஏற்றுமதியாகி வருகிறது. இதற்காக மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் நேரடியாக வருசநாடு பகுதிக்கு வந்து விவசாயிகளிடமிருந்து சாம்பார் வெள்ளரி கொள்முதல் செய்து செல்கிறார்கள்.

சாம்பார் வெள்ளரி அதிகளவில் ஏற்றுமதி செய்த போதிலும், அதற்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தற்போது சாம்பார் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 6 ரூபாயில் இருந்து 7 ரூபாய் வரை விலை போய் கொண்டிருக்கிறது. இந்த விலை உரம், பூச்சி மருந்து வாங்குவதற்கு கூட போதவிலல்லை. கோடை காலத்தில் விலை அதிகரிக்கும் என்பதால் தற்போது 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாம்பார் வெள்ளரி பயிரிடும் பணிகளை செய்து வருகின்றனர். தேனி, ஆண்டிபட்டி, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் நேரடியாக வந்து சாம்பார் வெள்ளரியை வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Related Stories: