உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி:  ஊட்டியில் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இங்குள்ள பூங்காக்கள் தயார் செய்யப்படும். குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

மேலும், மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். அதேபோல், ரோஜா பூங்காவிலும் கண்காட்சி நடத்தப்படுகிறது.  இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தாவரவியல் பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் பொதுவாக உறை பனி விழும் சமயத்தில் மலர்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.  இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள்.  ஆனால், இம்முறை உறை பனி விழுந்த போதிலும், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் காணப்படுகிறது.  இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

Related Stories: