ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மருத்துவனமனையில் தி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். ஜார்கண்ட் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த  தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை 5 பேர் - மருத்துவர், அவரது மனைவி, அவர்களது மருமகன், மற்றொரு உறவினர் மற்றும் அவர்களது வீட்டு வேலை செய்பவர்கள் தீயில் சிக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: