கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ம் தேதி கோ பர்ஸ்ட் விமானம் சென்றது. விமான நிலையத்தில் 55 பயணிகளை அவர்களது பொருட்களுடன்  விமானம் விட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக கோ பர்ஸ்ட் நிறுவனமேலாளருக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியது.  இந்நிலையில், பயணிகளை விட்டுச் சென்ற விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதத்தை டிஜிசிஏ  விதித்துள்ளது.

Related Stories: