லடாக்கில் எல்லை பகுதிகளை இழக்கிறதா இந்தியா?.. அதிர்ச்சி தகவல்..!

லடாக்: கிழக்கு லடாக்கில் உள்ள 65 ரோந்து புள்ளிகளில் 26 இடங்களின் கட்டுப்பாட்டை இந்திய ராணுவம் இழந்துள்ள அதிர்ச்சி தகவல். டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற வருடாந்தர காவல் துறை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டுரையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவல் துறை வருடாந்தர ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இந்திய ராணுவத்தின் பிலே சேப் என்ற மென்மையான அணுகுமுறையால் எல்லையில் எளிதில் செல்லக்கூடிய பகுதிகள் கூட எளிதில் அணுக முடியாத நிலைகளாக மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தினர் எல்லை முழுவதும் உயர் தெளிவு திறன் கேமராக்களை பொருத்தி இருப்பதாகவும் பல இடங்களில் சோதனை சாவடிகளை நிறுவி மாறுவேடங்களில் காவலர்களை குவித்திருப்பதால் இந்திய மேய்ச்சல் காரர்களின்  நடமாட்டம் கட்டுப்படுத்தபடுவதாகவும்  அதில் கூறப்பட்டு இருக்கிறது. பிபி 15 மற்றும் 16 பகுதிகளில் சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட படை விலகல் நடவடிக்கை எதிரொலியாக கோக்ரா மலைகள், பேங்காக் வடக்கு கரை மற்றும் காக்சும் பகுதிகள் மேய்ச்சல் நிலங்களை இழந்துவிட்டதாகவும் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.

காரகோரம் கனவாயிலிருந்து சுமோர் வரை 65 ரோந்து புள்ளிகள் இருந்த நிலையில் படை விலகல் முடிவால் அதில் 26 புள்ளிகளின் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்திய ராணுவப் படையினரோ, குடிமக்களோ செல்லாததே சாதகமாக்கிக் கொண்ட சீன படையினர் அங்கு தங்களுடைய ஆதிக்கத்தை அதிகரித்து உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் அருகில் சீனா துருப்புகளை குவிக்க தொடங்கிய ஏப்ரல், மே 2020கு முன்னர் இந்த புள்ளிகள் இந்திய வீரர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டவை. இந்தியா சீன எல்லையில் ஒரு இடையாக மண்டலத்தை உருவாக்கி அதில் இந்தியாவின் கட்டுப்பாட்டை முடக்கி சீனா திட்டமிட்டுள்ளதாகவும்,  சீனாவின் இந்த தந்திர நடவடிக்கை சலாமி ஸ்லைசிங் என்று அழைக்கப்படுவதாகவும் அந்த கட்டுரையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories: