திருமலையில் அனுமதியின்றி பறக்க தடை; டிரோனை செயலிழக்க வைக்க நவீன கருவி பொருத்த ஏற்பாடு: செயல் அதிகாரி தர்மா தகவல்

திருமலை: ‘திருப்பதி- திருமலையில் அனுமதியின்றி பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அனுமதியின்றி பறக்கும் டிரோனை செயலிழக்க வைக்கும் நவீன கருவி பொருத்தப்படும்’ என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார். திருப்பதி திருமலை தேவஸ்தான   செயல் அதிகாரி தர்மா நேற்று திருமலையில் அளித்த பேட்டி : மைக்ரோ டிரோன்களை உடனுக்குடன் கண்டறிந்து ஜாம் செய்யும் கடற்படை எதிர்ப்பு டிரோன் சிஸ்டம் திருமலையில் விரைவில் கொண்டு வரப்பட  உள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்துடன் கொள்முதல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  பக்தர்களின் உடமைகளை  பாதுகாப்பான கொண்டு செல்லும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் விமான நிலையத்தில் உள்ளதை போன்று நவீன லக்கேஜ் டேகிங் முறை கொண்டு வரப்பட உள்ளது.  2019ல் ரூ..13,025 கோடியாக இருந்த வங்கி டெபாசிட் தற்போது ரூ.15,938 கோடியாக உயர்ந்துள்ளது. தங்க கட்டிகளாக  7,339 கிலோ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது  10,258 கிலோவாக உயர்ந்துள்ளது என்றார்.

Related Stories: