நிலக்கரி ஊழல் வழக்கை விசாரிக்க நீதிபதி சுனைனா சர்மா நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த 1993 மற்றும் 2010ம் ஆண்டுக்கு இடையே ஒதுக்கிய 214 நிலக்கரி சுரங்க செயல்பாடுகளில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 214 நிலக்கரி சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்து கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.

நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் தன்னை பணியில் இருந்து விடுவிக்க கோரியதால், அவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனைனா ஷர்மாவை உச்ச நீதிமன்றம் நேற்று நியமித்தது.

Related Stories: