கொள்ளிடம் ஆற்றில் ஆண், பெண் சிலைகள் கண்டுபிடிப்பு

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ரயில் பாலத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்கும் வகையில் படித்துறை போன்ற அமைப்பு உள்ளது. இந்த வழியே இங்கு குளிப்பவர்கள் இறங்கி நீராடி விட்டு செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து சுற்றுலா செல்பவர்களும் நீராடி விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் தண்ணீரில் இறங்கி நடந்து சென்று குளிக்க முற்பட்டபோது காலில் பெரிய பொருள் ஒன்று இடறியது.

இதனால் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களின் காலில் சற்று வலியும் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடி குறைந்த ஆழம் உடைய பகுதியில் தண்ணீருக்குள் கிடக்கும் அந்த பொருளை இழுத்து வந்தனர். கரைப்பகுதியை நெருங்கும் நேரத்தில் அதன் எடை அதிகமாக இருந்ததால் என்னவென்று அனைவரும் பார்த்தபோது சிமெண் கான்கிரீட்டால் செய்யப்பட்டிருந்த இந்த சிலைகள் ஆண் மற்றும் பெண் சிலைகள் இருந்தன.

இந்த 2 சிலைகளும் பார்க்கின்ற போது நன்கு சிறப்பாக வாழ்ந்து மறைந்த ஒரு மனிதராக இருக்க வேண்டும். மற்றொன்று அவரின் மனைவி சிலையாக இருக்கலாம். எந்த பகுதியிலோ வைக்கப்பட்டிருந்த சிலைகள் சிதிலம் அடைந்ததால் ஆற்றிற்குள் எடுத்து வந்து வீசி இருக்கலாம் என்று தெரிய வந்தது. மேலும் அந்த ஆண் சிலை, ஒரு ஜமீன்தார் போன்றும், பெண் சிலை தலையில் துணியால் முக்காடு போட்டது போன்றும் இருந்தது.

ஆண் சிலை பார்ப்பதற்கு கம்பீரமாக உள்ளது நடந்து செல்வதற்கு பயன்படுத்தும் ஊன்றுகோலை வைத்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிலை கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் தண்ணீருக்குள்ளேயே போட்டுவிட்டு இளைஞர்களும் சிறுவர்களும் சென்று விட்டனர்.

இது ஏதோ பொருளாக இருக்குமோ என்று ஆவலுடன் எடுத்து வந்து பார்த்த போது தான் இது சிமெண்ட் கான்கிரிடால் செய்யப்பட்டுள்ள ஆண் பெண் சிலைகள்,இதனால் எந்த பயனும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சிறுவர்கள் இதனை தண்ணீர் குள்ளேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

Related Stories: