இந்திய எல்லை நிலவரம் சீன அதிபர் ஜின் பிங் ஆய்வு

பெய்ஜிங்: கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ள சீன வீரர்களுடன் அதிபர் ஜி ஜின் பிங் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடியதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அப்போது அதிபர் வீரர்களிடம் எல்லை கண்காணிப்பு, தயார் நிலை மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் அவர்கள் எல்லை பாதுகாப்பின் மாடல்கள் என்றும் அவர்களது முயற்சிகளை தொடரவும், பங்களிப்பை வழங்கவும் அவர்களை ஊக்குவித்ததாகவும் ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: