2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றார். இதனிடையே 2018 பொதுதேர்தலில் மியான்வாலி தொகுதியில் போட்டியிட இம்ரான் கான் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் டெரியன் ஒயிட் என்ற தன் ரகசிய மகளின் பெயரை குறிப்பிடவில்லை என புகார் எழுந்தது.

இதுகுறித்து முகமது சாஜித் என்பவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில் 2 நீதிபதிகள் முகமது சாஜித்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து முகமது மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஒற்றை நீதிபதி தாரிக் மஹ்மூத், ஏற்கனவே 2 நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து முகமது சாஜித் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: