சீக்கியரை கொல்ல சதி செய்த வழக்கில் அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்: செக்குடியரசில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்

வாஷிங்டன்: காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

The post சீக்கியரை கொல்ல சதி செய்த வழக்கில் அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்: செக்குடியரசில் இருந்து கொண்டு செல்லப்பட்டார் appeared first on Dinakaran.

Related Stories: