ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட்

புதுடெல்லி: மின்னணு எந்திரங்களை ஹேக் செய்வதால், தேர்தல்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி இருக்கும் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் என்பவர் தனது ட்விட்டர் பதிவில்,’ அசோசியேட்டட் பிரஸ் தகவல்படி, பியூர்டோ ரிகோவின் முதன்மைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடு புகார்கள் வந்துள்ளன. அங்கு அதிர்ஷ்டவசமாக, காகிதத் வாக்குப்பதிவும் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. காகித வாக்குப்பதிவு இல்லாத இடங்களில் என்ன நடந்திருக்கும்?. அமெரிக்க குடிமக்கள் தங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் எண்ணப்பட்டன என்பதையும், அவர்களின் தேர்தல்களை ஹேக் செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல்களில் மின்னணு குறுக்கீட்டைத் தவிர்க்க, காகித வாக்குச் சீட்டுக்கு நாம் திரும்ப வேண்டும். எனது நிர்வாகத்திற்கு காகித வாக்குச்சீட்டுகள் தேவைப்படும். எனவே நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டை மறு டிவிட் செய்துள்ள டெஸ்லா அதிபரும், டிவிட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க் கூறுகையில்,’மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: